
யார் யாருக்கோ கவி எ
Read Count : 83
Category : Poems
Sub Category : N/A
யார் யாருக்கோ கவி எழுதும் நான்என் தங்கை மகனுக்காக ஒரு கவி இதோஎந்த ஒரு மலரும் தந்ததில்லையடா ,தங்கை மகனே புவியரசுஉன் பூ முகம் தரும்புன்னகை போல்....எந்த ஒரு மழையும்நினைத்ததில்லை என்னைஉன் எச்சில் கொண்டு கொடுத்தமுத்தம் போல்...எந்த ஒரு காட்சியும் இப்படி இன்பம் கொடுத்ததில்லையடாஉன் துயில் சோம்பல்முறிக்கும் அழகினை போல்....இதுவரை எனக்கு பிடித்ததுமண்வாசம் ,இனிமேல் எனக்கு பிடித்ததுஉன்வாசம் !இத்தனை நாட்களில் இல்லாதஎதுவோ என்னை கட்டி இழுக்குதடா ...?நீ எங்கு சென்றாலும் உன் நினைவுகள் என்னுள் என்றும் நிறைந்திருக்கும்என் குட்டி தங்கமேஎன் தங்கை பெற்றெடுத்தமுத்தே புவியரசுநான் நானாய் இருக்கும் நேரங்களில்,நாணுகிறேன் உன்னைப்போல்,உன் நினைவுகளால்,மீண்டும் குழந்தையாய்.....இப்படிக்குநா.சு.கார்த்தி ... ✍️